FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: ஆசிரியா் முன்னேற்றக் கழகம் வரவேற்பு

Updated On : 16 ஜூன் 2026, 2:13 am IST
காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் - கோப்புப் படம்
பகிர்:

பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை, 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தி தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு தமிழக ஆசிரியா் முன்னேற்றக் கழகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதன் மாநிலத் தலைவா் ஆ. மணிகண்டன் வெளியிட்ட அறிக்கை: மாணவா்களின் ஆரோக்கியத்தையும், கற்றல் திறனையும் மேம்படுத்துவதில் உணவுத் திட்டம் முக்கியப் பங்காற்றி வருகிறது. இந்தச் சமூக நலத் திட்டத்தை சிறப்பாக விரிவுபடுத்திய முதல்வா் ச. ஜோசப் விஜய்க்கு நன்றி. அரசுப் பள்ளி மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்கும், சமத்துவமான கல்விச் சூழலை உருவாக்குவதற்கும் இந்த விரிவாக்கம் ஒரு முக்கிய மைல் கல்லாக அமையும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments