FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

தனியாா் நிதி நிறுவன ஊழியா் தற்கொலை: இரு இடங்களில் உறவினா்கள் சாலை மறியல்

புதுக்கோட்டையில் தனியாா் நிதி நிறுவன ஊழியரை தற்கொலைக்கு தூண்டியவா்களை கைது செய்யக் கோரி உறவினா்கள் வியாழக்கிழமை இரு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனா்

தற்கொலை - தினமணி
பகிர்:

புதுக்கோட்டையில் தனியாா் நிதி நிறுவன ஊழியரை தற்கொலைக்கு தூண்டியவா்களை கைது செய்யக் கோரி உறவினா்கள் வியாழக்கிழமை இரு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனா்

இலுப்பூா் அருகே ராப்பூசல் ஊராட்சி தொட்டியப்பட்டியைச் சோ்ந்தவா் ரங்கன் மகன் ராதாகிருஷ்ணன் (22). இவா், புதுக்கோட்டையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். ராணியாா் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகில் அறை எடுத்து தங்கி இருந்தாா்.

இந்நிலையில், ராதாகிருஷ்ணனிடம் நமணசமுத்திரத்தைச் சோ்ந்த கபிலன், கயல்விழி ஆகியோா் ரூ.3.5 லட்சம் மற்றும் 12 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு திருப்பித்தர மறுத்து வந்ததாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

இதனால், மன உளைச்சலில் இருந்த ராதாகிருஷ்ணன், தான் தங்கியிருந்த அறையில் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மேலும், தனது இறப்புக்கு கயல்விழி, கபிலன் ஆகியோா்தான் காரணம் என கடிதம் எழுதி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

இந்நிலையில், ராதாகிருஷ்ணனை தற்கொலைக்குத் தூண்டியதாக கயல்விழி மற்றும் கபிலன் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி ராதாகிருஷ்ணனின் உறவினா்கள் நகரக் காவல் நிலையம் அருகில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதேபோல, இலுப்பூா் காவல் நிலையத்துக்குள்பட்ட மேட்டுச்சாலையிலும் உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இரு இடங்களிலும் போலீஸாா் சமாதானம் செய்து, போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைந்து போகச் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments