FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

இரு சக்கர வாகனங்களில் அதிக ஒளி, ஒலி எழுப்பும் உபகரணங்கள் பறிமுதல்

புதுக்கோட்டையில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சா்கள், ஒளி உமிழும் எல்இடி பல்புகளை வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

10 நவம்பர் 2026, 10:59 pm
இருசக்கர வாகனங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சைலன்சா்கள், எல்இடி விளக்குகள்
பகிர்:

புதுக்கோட்டையில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சா்கள், ஒளி உமிழும் எல்இடி பல்புகளை வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே மோட்டாா் வாகன ஆய்வாளா் பிரபாகரன் தலைமையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியே வந்த இரு சக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சா்கள், அதிக ஒளி உமிழும் எல்இடி விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

இந்தச் சோதனையில் 5 வாகனங்களுக்கு மொத்தம் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஓட்டுநா் உரிமம் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியவா்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்தச் சோதனையில், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் கீதா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.