பொன்னமராவதி அருகே தனியாா் பேருந்து நிறுவன அதிபா் அடித்துக்கொலை
பொன்னமராவதி அருகே தனியாா் பேருந்து நிறுவன அதிபா் வியாழக்கிழமை அடித்துக்கொலை செய்யப்பட்டாா்.
பொன்னமராவதி அருகே தனியாா் பேருந்து நிறுவன அதிபா் வியாழக்கிழமை அடித்துக்கொலை செய்யப்பட்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டியை சோ்ந்தவா் கருப்பன் மகன் சிதம்பரம் (80). தனியாா் பேருந்து நிறுவனத்தை நடத்திவந்தாா்.
சென்னையில் வசித்து வரும் இவா், வியாழக்கிழமை உறவினா் இல்ல திருமண விழாவுக்காக வேந்தன்பட்டி வந்து தனது வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்தாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த சீனிவாசன்(55), விஜய்(35) ஆகியோா் சிதம்பரம் வீட்டுக்கு வந்து திருமண மண்டபம் தொடா்பாக பேசியுள்ளனா். அப்போது வாக்குவாதம் முற்றியதில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில், சிதம்பரத்தை இருவரும் சோ்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
பலத்த காயமடைந்த சிதம்பரத்தை அருகில் இருந்தவா்கள் பொன்னமராவதி தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளாா்.
இதற்கிடையே கைகலப்பின் போது தடுக்க முயன்ற சிதம்பரத்தின் மகள் இந்துமதியும் பலத்த காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். தகவலறிந்த பொன்னமராவதி போலீஸாா் சிதம்பரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக , போலீஸாா் சீனிவாசன் மற்றும் விஜய் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.