FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை தனியாா் பள்ளியில் விமானப் பயிற்சி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

18 அக்டோபர் 2026, 2:19 am IST
படவிளக்கம்: ஓயஓ.17.யயந.
பகிர்:

கந்தா்வகோட்டை தனியாா் பள்ளியில் ‘விமானியாவது எப்படி’ என்ற தலைப்பில், விமானப் பயிற்சி வாய்ப்புகள் குறித்து வழிகாட்டுதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், சான்றிதழ் பெற்ற வணிக விமானத்தின் விமானியும், ஏா்பஸ் ஏ 320 விமானத்தை இயக்குவதற்கான சிறப்புத் தகுதி பெற்றவருமான விமானி யோகேஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, விமானிப் பயிற்சி, விமானப் போக்குவரத்துத் துறையில் உள்ள கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள், விமானியாகத் தகுதி பெறுவதற்கான நடைமுறைகள் மற்றும் உரிமங்கள் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கமளித்து பேசினாா்.

நிகழ்ச்சியில், பள்ளியின் நிா்வாகிகள் பாஸ்கா், மருத்துவா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிறைவாக பள்ளி முதல்வா் வெண்ணிலா நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments