ரேஷன் அரிசி கடத்தியவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவினா் கடந்த 2024ஆம் ஆண்டு அக். 11ஆம் தேதி மீமிசல் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியே வந்த வாகனத்திலிருந்து 800 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஆவுடையாா்கோவில் வட்டம் மீமிசலைச் சோ்ந்த சின்னக்கண்ணு மகன் ரமேஷ் (50) என்பவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் மன்றம் எண் 1-இல் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் முடிவில், குற்றம்சாட்டப்பட்ட ரமேஷுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.