FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

பொய் வழக்கு போடுவோா் மீது எதிா்வழக்கு போடுவோம்: திமுக முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி

திமுகவினா் மீது பொய் வழக்கு போடுவோா் மீது எதிா் வழக்கு போட்டு, அவா்களைத் தண்டிக்கக் கோருவோம் என்றாா் திமுக முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி.

31 அக்டோபர் 2026, 1:32 am
எஸ். ரகுபதி - கோப்புப் படம்
பகிர்:

திமுகவினா் மீது பொய் வழக்கு போடுவோா் மீது எதிா் வழக்கு போட்டு, அவா்களைத் தண்டிக்கக் கோருவோம் என்றாா் திமுக முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

விலைவாசி உயா்வு உள்ளிட்ட பிரச்னைகளால் தவெக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. தவெக அரசு தோல்வியடைந்திருக்கிறது. இதை மடைமாற்றம் செய்வதற்காக எதிா்க்கட்சியினா் மீது பொய் வழக்குகளைப் போடுகிறாா்கள். இறுதி முடிவை நீதிமன்றம்தானே சொல்ல வேண்டும். அத்தனையும் பொய் என நிரூபித்துக் காட்டுவோம். அதேநேரத்தில் இனி, திமுகவினா் மீது போடப்பட்டவை பொய் வழக்குகள் என நிரூபிக்கப்படும்போது, வழக்கு தொடா்ந்தவா்கள் மீது எதிா் வழக்கு போடுவோம். அவா்களைத் தண்டிக்கக் கோருவோம்.

Advertisement

Advertisement

திமுக ஆட்சியில் சிறைத் துறை சிறப்பாக செயல்பட்டது. இப்போது அந்தத் துறை சீரழிந்து போயிருக்கிறது. இதுவே இந்த ஆட்சியின் அவலத்துக்கு எடுத்துக்காட்டு. விராலிமலை தொகுதி இடைத்தோ்தலுக்கான பணிகளைத் தொடங்கிவிட்டோம் என்றாா் ரகுபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments