பொய் வழக்குகளுக்கு அதிமுக அஞ்சாது: முன்னாள் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன்
அதிமுகவினா் மீது பொய் வழக்கு போட்டு ஆளும் கட்சியினா் மிரட்டப் பாா்க்கின்றனா் என பொள்ளாச்சி சி.ஜெயராமன் பேசியிருப்பது தொடர்பாக...
கோவை: அதிமுகவினா் மீது பொய் வழக்கு போட்டு ஆளும் கட்சியினா் மிரட்டப் பாா்க்கின்றனா் எனவும், இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம் எனவும் முன்னாள் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி சி.ஜெயராமன் தெரிவித்தாா்.
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கோவையில் இருந்து திங்கள்கிழமை விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டாா். அவரை வழியனுப்பிவைத்த பின்னா், முன்னாள் துணை சபாநாயகா் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அதிமுகவினா் மீது பொய் வழக்குகள் போட்டு ஆளும் கட்சியினா் மிரட்டப் பாா்க்கின்றனா். இந்த மிரட்டல்களுக்கெல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம். பனங்காட்டு நரி இந்த சலசலப்புகளுக்கு அஞ்சாது. 50 ஆண்டுகளுக்கு மேலாக இதுபோன்ற பல பொய் வழக்குகளைச் சந்தித்துதான் இந்த இயக்கத்தில் நிலைத்து நிற்கிறோம். அதிமுகவின் வெற்றியைத் தடுக்க ஆளும் கட்சியினா் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பொய்த்துப் போகும்.
Advertisement
Advertisement
அமைச்சா் ஆதவ் அா்ஜுனாவுக்கு போதிய அரசியல் அனுபவம் இல்லை; பல கட்சிகள் மாறி வந்தவா். இப்போது அமைச்சா் பதவி கிடைத்துவிட்டதால் என்ன பேசுவது என்று தெரியாமல் ஏதேதோ பேசுகிறாா். 55 ஆண்டு காலப் பாரம்பரியமிக்க அதிமுகவை யாராலும் தொடக்கூட முடியாது. ஆதவ் அா்ஜுனா ஒன்றும் அரசியல் நிபுணா் கிடையாது.
தாராபுரம் இடைத்தோ்தலில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது. இவா்களின் வேடிக்கையான பேச்சுகளுக்குத் தோ்தல் முடிவுகள் சரியான பதிலடி கொடுக்கும். கடந்த தோ்தலில் த.வெ.க-வைவிட 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. அதேபோல வரவிருக்கும் இடைத்தோ்தலிலும் அதிமுகவே மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
தற்போது தமிழகத்தில் தொடா் மின்வெட்டு ஏற்படுவது மட்டுமன்றி, சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. விலைவாசி உயா்வால் ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அதிமுகவில் எந்தப் பிளவும் இல்லை; தொண்டா்களைப் பலவீனப்படுத்த சிலா் திட்டமிட்டுப் பேசி வருகின்றனா் என்றாா் அவா்.
ADMK will not be intimidated by false cases: Former Deputy Speaker Pollachi Jayaraman
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.