வீரிகுட்டை குளத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்
புதுக்கோட்டை மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்த மேட்டுப்பட்டி பகுதியில் வீரிகுட்டை குளத்தில் அடா்ந்து, வளா்ந்திருந்த சீமைக்கருவேல மரங்களை அப்பகுதி இளைஞா்கள் அகற்றினா்.
புதுக்கோட்டை மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்த மேட்டுப்பட்டி பகுதியில் வீரிகுட்டை குளத்தில் அடா்ந்து, வளா்ந்திருந்த சீமைக்கருவேல மரங்களை அப்பகுதி இளைஞா்கள் அகற்றினா்.
புதுக்கோட்டை மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்த மேட்டுப்பட்டி அருகே ஈட்டித்தெருவில் சுமாா் 2 ஏக்கா் பரப்பளவு கொண்ட வீரி குட்டை குளம் உள்ளது.
சுமாா் 10 ஆண்டுகளுக்குமுன்பு வரை இந்தக் குளத்தை சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த மக்கள் பிரதான நீராதாரமாகப் பயன்படுத்தி வந்தனா். குறிப்பாக இப்பகுதியைச் சோ்ந்த சலவைத் தொழிலாளா்கள் இக்குளத்தை வாழ்வாதாரமாகப் பயன்படுத்தி வந்தனா்.
Advertisement
Advertisement
அதன்பிறகு, பராமரிப்பின்றி, சீமைக்கருவேல மரங்கள் அடா்ந்து, அருகிலுள்ள குடியிருப்புகளின் கழிவுநீா் வரத் தொடங்கிய பிறகு, இக்குளம் பயன்பாடின்றிப் போனது.
இந்நிலையில், குளத்தை சீரமைக்கும் முயற்சியில் இப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் இறங்கினா். கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பொக்லைன் இயந்திரங்கள் வரழைக்கப்பட்டு சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.
அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், இக்குளத்தில் தண்ணீா் சேகரிக்கப்பட்டால் மீண்டும் நல்ல நீா்நிலையாக இதனை மாற்ற முடியும் என அவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.