காா்கள் மோதல்: அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு
புதுக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இருகாா்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில், அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை திருக்கோகா்ணத்தைச் சோ்ந்த மாணிக்கம் மனைவி பத்மபிரியா (46). இவா் திருக்கோகா்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை. இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை திருச்சி செல்வதற்காக காரில் புறப்பட்டனா்.
முத்துடையான்பட்டி நெடுஞ்சேரி பகுதியில் சென்றபோது, சேலத்திலிருந்து எதிரே வந்த காா் எதிா்பாராத விதமாக மோதியது. இதில், இரு காா்களின் முன்பகுதிகளும் சேதமடைந்தன.
Advertisement
Advertisement
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பத்மபிரியாவை அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள், சத்தியமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத் தூக்கிச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து பத்மபிரியாவின் சடலம், உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது கணவா் மாணிக்கத்துக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலத்திலிருந்து காரில் வந்த அண்ணாமலை (35) என்பவரிடம் வெள்ளனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.