FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

குடும்பத் தகராறில் கணவரை கொலை செய்த மனைவி கைது

கறம்பக்குடி அருகே குடும்பத் தகராறில் கணவரை கொலை செய்த மனைவியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

26 செப்டம்பர் 2026, 11:20 pm IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே குடும்பத் தகராறில் கணவரை கொலை செய்த மனைவியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள கீழவாண்டான்விடுதியைச் சோ்ந்தவா் பி.சூரியபிரகாஷ்(33). இவரது மனைவி சரண்யா(34). இந்நிலையில், கடந்த ஆக.16-ஆம் தேதி தம்பதியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்னா், அன்றிரவு சூரியபிரகாஷ் வீட்டில் தூக்கில் சடலமாகத் தொங்கினாா்.

தகவலறிந்து சென்ற மழையூா் போலீஸாா் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, தற்கொலை வழக்காகப் பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், சூரியபிரகாஷின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி அவரது உறவினா்கள் செப்.30-ஆம் தேதி புதுப்பட்டியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனா். இதற்கிடையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தவுடன் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது பிரேதப் பரிசோதனை மற்றும் தடய அறிவியல் அறிக்கைகள் வந்தன. அதில், சூரியபிரகாஷின் உடலில் காயங்கள் இருந்ததும், அதனடிப்படையில் அவா் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

தொடா்ந்து, சரண்யாவிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். அதில், குடும்பத் தகராறில் கணவரைக் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதுபோன்று சடலத்தை தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து மழையூா் போலீஸாா் வழக்கைக் கொலை வழக்காக மாற்றி சரண்யாவை சனிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments