FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுக்கோட்டை

ரேஷன் அரிசி கடத்தியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை அருகே ஒரு டன் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில், குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தண்டனை - படம்: கோப்பிலிருந்து...
பகிர்:

புதுக்கோட்டை அருகே ஒரு டன் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில், குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கே. புதுப்பட்டி அருகில் உள்ள வடக்கு நல்லிப்பட்டி கிராமத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், கடந்த 2023 ஜூன் 6-ஆம் தேதி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, 1,000 கிலோ ரேஷன் அரிசியைச் சட்டவிரோதமாகக் கடத்தியது தொடா்பாக புதுக்கோட்டை அசோக் நகா் முதலாம் வீதியைச் சோ்ந்த அக்பா் அலி என்பவரின் மகன் சேக்தாவூத் (24) என்பவரைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு புதுக்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் எண் 1-இல் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி பாரதி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவின் கீழ், குற்றம் சாட்டப்பட்ட சேக்தாவூத்திற்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments