பாபநாசம் அருகே:வேன்-இருசக்கர வாகனம் மோதல்: இளைஞர் சாவு
பாபநாசம் அருகே தனியார் கல்லூரி வாகனமும் இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
பாபநாசம் அருகே தனியார் கல்லூரி வாகனமும் இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
அய்யம்பேட்டை காவல் சரகம், நெடுந்தெரு பாலவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்த ராஜ்கண்ணு மகன் பிரகாஷ் (26). இவர் வெள்ளிக்கிழமை பிற்பகல்
இருசக்கர வாகனத்தில் அய்யம்பேட்டையிலிருந்து நெடுந்தெருவுக்கு வந்து கொண்டிருந்தார். தஞ்சாவூர்-கும்பகோணம் பிரதான சாலையில், நெடுந்தெரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் அருகே வந்தபோது, பாபநாசத்திலிருந்து அய்யம்பேட்டை நோக்கி சென்ற தனியார் கல்லூரி வாகனமும், பிரகாஷின் வாகனமும் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட பிரகாஷ், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Advertisement
Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அய்யம்பேட்டை போலீஸார், பிரகாஷின் சடலத்தை கைப்பற்றி அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.