ஆட்சியரகத்தில் இன்று கடன் வழங்கும் முகாம்
தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) சார்பில் செயல்படுத்தப்படும்
தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) சார்பில் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களில் கடன் வழங்கும் முகாம் வியாழக்கிழமை (ஆக.2) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது: ஆட்சியரகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர் கூட்ட அரங்கத்தில் 2018 - 19 ஆம் ஆண்டுக்குத் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களுக்கு வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இக்கழகத்தின் மூலம் பொதுக் காலக் கடன், தனி நபர் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்விக் கடன் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 04362 - 278416 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.