FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

ஊதிய விவகாரம்: அரசு மருத்துவர்கள் போராட்டம்

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வலியுறுத்தி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 8:45 am IST
பகிர்:

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வலியுறுத்தி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் மருத்துவர்கள் புதன்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.
தஞ்சாவூரில் இந்த இயக்கத்துக்குக் கூட்டு நடவடிக்கைக் குழு மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார். செயலர் ராஜேந்திரன், பொருளாளர் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்தது: மாவட்டத்தில் அரசு மருத்துவர்கள் சுமார் 1000 பேர் உள்ளனர். இவர்கள் வெள்ளிக்கிழமை (ஆக.3) வரை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவர். இதையடுத்து, ஆக. 5-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை உறுப்பினர்களைச் சந்தித்து, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் துண்டறிக்கைகள் விநியோகம் செய்யப்படும். பின்னர், ஆக. 20-ம் தேதி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் தர்னா போராட்டமும், 24-ம் தேதி ஆட்சியரகத்துக்குப் பேரணியாகச் செல்வது, 27-ம் தேதி மருத்துவ வகுப்புகளையும், உயர் அலுவலர்கள் கூட்டத்தையும், அரசுக்குத் தர வேண்டிய பதிவுகளை நிறுத்துவது, இந்திய மருத்துவ கவுன்சிலை புறக்கணிப்பது போன்ற இயக்கங்களும், செப். 12-ம் தேதி சென்னை கோட்டையை நோக்கிப் பேரணியாகச் செல்வது, 21-ம் தேதி அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்வது ஆகிய இயக்கங்கள் நடத்தப்படவுள்ளன என்றனர்.
கும்பகோணத்தில்.... கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 36 மருத்துவர்கள் கோரிக்கை அட்டையை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments