FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

டேபிள் டென்னிஸ், கால்பந்து போட்டிகளில் முதலிடம்: பள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு 

டேபிள் டென்னிஸ் (மேஜை பந்து), கால்பந்து ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற இமாம் ஷாபி மெட்ரிக். பள்ளி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை பாராட்டப்பட்டனர். 

Updated On : 6 ஆகஸ்ட் 2018, 8:22 am IST
பகிர்:

டேபிள் டென்னிஸ் (மேஜை பந்து), கால்பந்து ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற இமாம் ஷாபி மெட்ரிக். பள்ளி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை பாராட்டப்பட்டனர். 
பட்டுக்கோட்டை வட்ட அளவில் 12 பள்ளிகளுக்கு இடையே டேபிள் டென்னிஸ் (மேஜை பந்து) போட்டி  அதிராம்பட்டினம் இமாம் ஷாபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் ஜூனியர்,  சீனியர்,  சூப்பர் சீனியர் ஆகிய பிரிவுகளில் பங்கேற்ற அதிராம்பட்டினம் இமாம் ஷாபி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஏ.அகமது அர்ஷாத், ஏ.ஆதிப், எம்.ஒய். அகமது அனஸ், பி.சேக் சுஹைல் அகமது, எம்.முகமது ராவுத்தர், எம்.ஒய்.முகமது இப்ராஹிம் ஆகியோர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றனர்.
இதே பள்ளி மாணவர்கள் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டுக்கோட்டை வட்ட அளவிலான கால்பந்து போட்டியில் பங்கேற்று, கீழோர் பிரிவில் முதலிடம் பிடித்து, மாவட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றனர். 
இரு போட்டிகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள்,  இவர்களுக்குப் பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் டி.கார்த்திகேயன் ஆகியோரை இமாம் ஷாபி பள்ளித் தாளாளர் எம்.எஸ்.தாஜுதீன், இணைத் தாளாளர் எம்.எஸ்.முகமது ஆஜம்,  பொருளாளர் முகமது இப்ராஹிம்,  இயக்குநர் சாகுல் ஹமீது,  முதல்வர் மீனாகுமாரி, 
மேலாளர் அஸ்ரப் அலி  மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகப் பொறுப்பாளர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments