FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசம் அய்யம்பேட்டை  பகுதிகளில்  ஜி.கே. மூப்பனார்  பிறந்த நாள் விழா 

பாபநாசம், அய்யம்பேட்டை பகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 88ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 10:13 am IST
பகிர்:

பாபநாசம், அய்யம்பேட்டை பகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 88ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
பாபநாசம் கீழவீதி கடைவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜி.கே.மூப்பனார்  உருவ படத்துக்கு பாபநாசம் வட்டார நகர  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில் வட்டார தலைவர்கள் எஸ்.டி.ஜெயகுமார், எஸ்.சேதுராமன், நகரத் தலைவர் தனபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
அய்யம்பேட்டை பேருந்து நிறுத்த வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜி.கே. மூப்பனார் உருவ படத்துக்கு வட்டார, நகர தமிழ் மாநில காங்கிரஸ்  கட்சியினர்  சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் நகரத் தலைவர் டி.ஆர்.ராஜாராமன், வட்டார இணை செயலாளர் கே. கலியமூர்த்தி, மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் எம்.ஜெ.ரியாஜீர் ரஹ்மான், வர்த்தகர் அணி தலைவர் ஜெயராமன், நகர பொருளாளர் முருகராஜ், செயலாளர் தண்டபாணி, இளைஞரணி தலைவர் சோமசுந்தரம், பொதுசெயலாளர் செல்வகுமார், துணைத்தலைவர் அசோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments