ஆற்றின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரத்தை அகற்ற கோரிக்கை
பேராவூரணி அருகே ஆற்றின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரத்தை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேராவூரணி அருகே ஆற்றின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரத்தை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேராவூரணியை அடுத்த ஆவணம் காவிரி மெயின் வாய்க்காலில் இருந்து பிரியும் ஆனந்தவள்ளி வாய்க்காலில், பழைய நகரம் செல்லும் பாதையில், அரசலங்கரம்பை என்ற இடத்தில் ஆற்றின் குறுக்கே யூகலிப்டஸ் மரம், சாலையைப் பெயர்த்து வேரோடு, வாய்க்காலின் மேல் விழுந்து கிடக்கிறது. கிளை வாய்க்காலில் தண்ணீர் வரத்து தற்போது கூடுதலாக வரும் நிலையில் தண்ணீர் செல்லும் வேகத்தை மரம் தடுப்பதால், வலுவிழந்த நிலையில் உள்ள வாய்க்காலின் கரைகள் உடைப்பெடுக்கும் அபாயம் உள்ளது. கடந்த சில தினங்களாக விழுந்து கிடக்கும் மரத்தை அகற்ற இதுவரை பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வாய்க்காலின் குறுக்கே விழுந்து கிடக்கும் மரத்தை அகற்றி, மரம் சாய்ந்ததால் சேதமடைந்த சாலையையும், சீரமைக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.