FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஒரத்தநாடு பள்ளியில் அமைதிப் பேரணி

ஒரத்தநாட்டில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா மற்றும் ஜே. ஆர்.சி மாணவர்கள் இணைந்து நடத்திய ஒரு நாள் பயிற்சி முகாம் மற்றும்

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

ஒரத்தநாட்டில் ஜெனிவா ஒப்பந்த நாள் விழா மற்றும் ஜே. ஆர்.சி மாணவர்கள் இணைந்து நடத்திய ஒரு நாள் பயிற்சி முகாம் மற்றும் அமைதிப் பேரணி ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  நடைபெற்றது. 
ஒரத்தநாடு கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் சின்னையன் தலைமை வகித்தார். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ஒரத்தநாடு வட்டார கல்வி அலுவலர்  முத்தமிழன் முன்னிலை வகித்தனர். மாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து ஒரத்தநாடு பேருந்து நிலையம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது. பேரணியை தஞ்சாவூர் வருவாய் மாவட்ட கன்வீனர் பிச்சை மணி, ஒரத்தநாடு ஜே.ஆர்.சி மாவட்ட அமைப்பாளர் செல்வராணி, தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மக்கள் தொடர்பு உதவி அதிகாரி ஜேம்ஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஏற்பாடுகளை ஒரத்தநாடு ஒன்றிய ஜே.ஆர். சி கன்வீனர் தமிழ்வாணன் செய்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments