FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

குவிண்டாலுக்கு ரூ. 400 ஊக்கக் தொகை கோரி மனு 

நெல் குவிண்டாலுக்கு ரூ. 400 ஊக்கத் தொகை வழங்கிட  விவசாயிகள் நலச் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

நெல் குவிண்டாலுக்கு ரூ. 400 ஊக்கத் தொகை வழங்கிட  விவசாயிகள் நலச் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசுக்கு திருவோணம் வட்டார விவசாயிகள் நலச் சங்க ஒன்றியச் செயலர் வி.கே. சின்னத்துரை அனுப்பிய கோரிக்கை மனு: 
தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் குறுவை சாகுபடி செய்து முடிந்த நிலையில் தற்போது சம்பா சாகுபடி பணிகள் பல லட்சம் ஏக்கரில் செய்திட அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. எனவே நெல் சாகுபடி செய்வதற்கு இடுபொருள் செலவு,  விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஆகியவற்றால் உற்பத்தி செய்த நெல்லுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. எனவே மத்திய அரசு விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் குவிண்டாலுக்கு ரூ. 200 ஊக்கத் தொகையாக அறிவித்துள்ளது. இந்த ஊக்க தொகை விவசாயிகளுக்கு போதுமான அளவுக்கு இல்லாததால் மாநில அரசு விவசாயிகளின் உற்பத்தி செலவினங்களைக் கருத்தில் கொண்டு கூடுதலான ஊக்கத்தொகையாக குவிண்டாலுக்கு ரூ. 400 ஆக உயர்த்தி வழங்கிட தஞ்சை விவசாயிகள் சார்பிலும் திருவோணம் வட்டார விவசாயிகள் நலச் சங்கம் சார்பிலும் கேட்டுக்கொள்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments