FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீர் சாலை மறியல்

பேராவூரணியில் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து விட்டு அவமதித்ததாக  வட்டாட்சியரை  கண்டித்தும்,

Updated On : 31 டிசம்பர் 2018, 10:01 am IST
பகிர்:

பேராவூரணியில் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து விட்டு அவமதித்ததாக  வட்டாட்சியரை  கண்டித்தும், குற்றவாளிகளைக் கைது செய்யாத சேதுபாவாசத்திரம்  காவல்துறையைக் கண்டித்தும் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை மாலை  திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மந்திரிபட்டினத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ராமமூர்த்தி, வீரபத்திரன் ஆகியோர் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியதாக, அதே பகுதியைச் சேர்ந்த 5 பேரை கைது செய்ய  வலியுறுத்தி,  டிச.31ஆம் தேதியன்று சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் சின்னத்தம்பி தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வட்டாட்சியர் பாஸ்கரன் அழைப்பு விடுத்திருந்தார். இதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அங்கு வந்திருந்தனர். ஆனால், பேச்சுவார்த்தைக்கு எதிர்த்தரப்பினர் யாரும் வரவில்லையாம்.  இதனால், தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு அவமதித்ததாகக் கூறியும்,  குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யாததைக் கண்டித்தும்  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பேராவூரணி காவல் ஆய்வாளர் பரமானந்தம், உதவி ஆய்வாளர் அருள்குமார் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குற்றவாளிகள் இருவரைக் கைது செய்துள்ளதாகவும்,  மற்றவர்கள் இரண்டு நாளுக்குள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மேலும் சேதுபாவாசத்திரத்தில், டிச. 31ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த சாலை மறியல் ஜனவரி 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments