FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

திருச்சி மண்டல அளவிலான   அஞ்சல்தலை கண்காட்சி  ஆக. 9-இல் குடந்தையில் தொடக்கம்

திருச்சி மத்திய மண்டல அஞ்சலக அளவிலான அஞ்சல்தலைக் கண்காட்சி கும்பகோணத்தில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி தொடங்குகிறது. 

Updated On : 26 ஜூன் 2018, 8:35 am IST
பகிர்:

திருச்சி மத்திய மண்டல அஞ்சலக அளவிலான அஞ்சல்தலைக் கண்காட்சி கும்பகோணத்தில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி தொடங்குகிறது. 
இதுகுறித்து கும்பகோணம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் எல். துரைசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி மத்திய மண்டல அஞ்சலக அளவிலான தபால்தலைக் கண்காட்சி குடந்தை பெக்ஸ் 2018 என்ற தலைப்பில் கும்பகோணம் மகாமக குளக்கரையில் உள்ள திருமண மண்டபத்தில் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அஞ்சல்தலை சேகரிப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பொதுமக்களும், மாணவர்களும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கண்டுகளிக்கலாம். இக்கண்காட்சியில் திருச்சி மத்திய அஞ்சலக மண்டலத்தின் அதிகாரத்துக்குள்பட்ட கடலூர், கரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, ஸ்ரீரங்கம், திருச்சி, தஞ்சாவூர், விருத்தாசலம் ஆகிய அஞ்சலக கோட்டங்களை சேர்ந்த அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள், பள்ளி,  கல்லூரி மாணவர்கள்,  தங்களது அஞ்சல்தலை சேகரிப்பை காட்சிப்படுத்தலாம்.
இதற்கான விண்ணப்பங்கள் அனைத்து அஞ்சல் கோட்ட தலைமை அலுவலகங்களிலும் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 12 ஆம் தேதிக்குள் "குடந்தை பெக்ஸ் 2018,  அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம்,  கும்பகோணம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments