FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

ரூ.80 கோடி சிலைகள் திருட்டு வழக்கு: கைது செய்யப்பட்டவரின் காவல் நீட்டிப்பு

ரூ. 80 கோடி மதிப்பிலான 8 ஐம்பொன் சிலைகள் திருட்டு வழக்கில் கைதானவரின் காவலை ஜூலை 4 ஆம் தேதி வரை நீட்டித்து கும்பகோணம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 26 ஜூன் 2018, 8:36 am IST
பகிர்:

ரூ. 80 கோடி மதிப்பிலான 8 ஐம்பொன் சிலைகள் திருட்டு வழக்கில் கைதானவரின் காவலை ஜூலை 4 ஆம் தேதி வரை நீட்டித்து கும்பகோணம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சென்னை சுங்குவார் சத்திரம் அருகே ராமானுஜபுரம் கிராமத்தில் மணிகண்டேஸ்வர் கோயிலில் இருந்து சிவன், பார்வதி ஐம்பொன் சிலையும், வந்தவாசி அருகே சௌந்தரியபுரம் ஆதிகேசவபெருமாள் கோயிலில் ஆதிகேசவபெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி ஆகிய மூன்று ஐம்பொன் சிலைகளும்,  பையூர் கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் இருந்த வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சக்கரத்தாழ்வார் ஆகிய நான்கு ஐம்பொன் சிலைகளும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருட்டு போனது. இது தொடர்பாக அந்தந்த பகுதிகளின் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
மேற்கண்ட ரூ. 80 கோடி மதிப்பிலான 8 ஐம்பொன் சிலைகளையும் விற்பதற்காக கடந்த 14.5.2015 அன்று இருசக்கர வாகனத்தில் சென்னை மேற்கு மாம்பலம் பகுதிக்கு கொண்டு வந்த தனலிங்கம் என்பவரை பிடித்த போலீஸார், இந்த வழக்கில் தொடர்புடைய 15 பேரை கைது செய்ததுடன், சிலைகளையும் மீட்டனர். 
இந்த வழக்கில் முக்கிய நபரான சென்னை புழலை அடுத்த காவாங்கரையைச் சேர்ந்த ஜெய்குமார் (எ) குமார் (45) அப்போது தப்பிவிட்டார்.
இதையடுத்து இவ்வழக்கு தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டதை அடுத்து, ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையிலான போலீஸார் ஜெய்குமாரை கடந்த 20 ஆம் தேதி காவாங்கரையில் கைது செய்து, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது சிலை தடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார்,  ஜெய்குமாரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி 5 நாள்கள் அனுமதி வழங்கினார். 
இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் டிஎஸ்பி பி.ஏ. சுந்தரம் தலைமையிலான போலீஸார், குமாரை  திருவண்ணாமலை, சென்னை ஆகிய இடங்களில் அவர் திருடிய கோயில்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணை முடிந்து திங்கள்கிழமை கும்பகோணம் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து ஜெய்க்குமாரை விசாரித்த கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி,  ஜூலை 4ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்;  அதுவரை திருச்சி மத்திய சிறையில் குமாரை அடைக்கவும் உத்தரவிட்டார். 
இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன்,  ஜெய்குமார் திருச்சிக்கு மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments