FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

மதுக்கூர் பகுதியில் வேளாண் திட்டப் பணிகள் ஆய்வு

மதுக்கூர் வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் நடைப்பெற்று வரும் வேளாண்மை திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட மத்திய திட்ட வேளாண்மை துணை இயக்குநர் கணேசன் அண்மையில் ஆய்வு

Updated On : 25 மே 2018, 4:02 am IST
பகிர்:

மதுக்கூர் வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் நடைப்பெற்று வரும் வேளாண்மை திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட மத்திய திட்ட வேளாண்மை துணை இயக்குநர் கணேசன் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார்.
தளிக்கோட்டை கிராமத்தில் மதுக்கூர் வேளாண்மை துறையினரால் விவசாயி சந்திரசேகர் வயலில் அமைக்கப்பட்டிருந்த பச்சைப்பயிறு பண்ணை மேலாண்மை திடலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், வம்பன் தேசிய பயறுவகை ஆராய்ச்சி மையத் தலைவர் பேராசிரியர் மணிவண்ணன், பயிர் பெருக்கத்துறை உதவிப் பேராசிரியர்கள் மகாலிங்கம் லெட்சுமிநாராயணன் ஆகியோரும் பங்கேற்றனர்.
அடுத்து, கருப்பூர் கிராமத்தில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் கருணாநிதி என்ற விவசாயியின் 5 ஏக்கர் பரப்புள்ள தென்னந்தோப்பில் அமைக்கப்பட்டுள்ள சொட்டுநீர் பாசனக் கருவிகளை பார்வையிட்டார். மோகூர் கிராமத்தில் நடப்பு குறுவை பருவத்தில் இயந்திர நடவிற்கான பாய் நாற்றங்காலை பார்வையிட்டு உர மேலாண்மை, நீர் நிர்வாகம் மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.
இதேபோல, வாட்டாக்குடி கிராமத்தில் எள், நிலக்கடலை, சூரியகாந்தி ஆகியவற்றை சாகுபடி செய்துள்ள விவசாயி பாலகிருஷ்ணன் வயலை பார்வையிட்டு, உயர் விளைச்சலுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினார்.
ஆய்வின்போது, மதுக்கூர் வேளாண்மை அலுவலர் நவீன்சேவியர், துணை வேளாண்மை அலுவலர் கலைச்செல்வன், வேளாண்மை உதவி அலுவலர்கள் நாராயணசாமி, அன்புமணி, கார்த்திக் பாபி, அட்மா திட்ட அலுவலர் பெனிக்சன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments