FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

மத்திய மண்டல தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டி: தஞ்சை அணி வெற்றி

தஞ்சாவூரில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை சார்பில் நடைபெற்று வந்த மத்திய மண்டல அளவிலான விளையாட்டு

Updated On : 25 மே 2018, 2:55 am IST
பகிர்:

தஞ்சாவூரில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை சார்பில் நடைபெற்று வந்த மத்திய மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகளில் தஞ்சாவூர் மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது.
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை சார்பில் மத்திய மண்டலத்திலுள்ள 9 மாவட்டங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை (மே 22) தொடங்கியது.
இதில், அணிப்பயிற்சி, நீர்விடுகுழாய் பயிற்சி, ஏணிப்பயிற்சி, கயிறு ஏறும் பயிற்சி, தந்திர கதம்பப் போட்டி, நீச்சல் போட்டிகள், கைபந்து போட்டி, கூடைப்பந்து, தடகளம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தத்தி தாவி தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், இறகு பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இவற்றில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு தஞ்சை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வியாழக்கிழமை பரிசு வழங்கினார். இதில், தஞ்சாவூர் மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், கேடயத்தையும் பெற்றன.
இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு மீட்பு பணிகள் திருச்சி மாவட்ட அலுவலர் மு. ராமமூர்த்தி, தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் க. பாபு, தீயணைப்பு-மீட்பு பணிகள் தஞ்சாவூர் உதவி மாவட்ட அலுவலர் ம. இளஞ்செழியன், தீயணைப்பு மீட்புப் பணிகள் பெரம்பலூர் மாவட்ட அலுவலர் சா. கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments