FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

மே 31-இல் ஓய்வூதியர் குறை தீர் நாள் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட கருவூலத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் மாதாந்திர கூட்டம் மே 31-ம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On : 25 மே 2018, 2:53 am IST
பகிர்:

தஞ்சாவூர் மாவட்ட கருவூலத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் மாதாந்திர கூட்டம் மே 31-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடுஅரசின் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் மே 31-ம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்டக் கருவூலத்தில் நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்களில் நிலுவையிலுள்ள குடும்ப ஓய்வூதியம், வாழ்நாள் நிலுவை, குடும்பப் பாதுகாப்பு நிதி விண்ணப்பங்கள், திருந்திய ஓய்வூதியங்கள், கூடுதல் ஓய்வூதியம் போன்ற தங்களது கோரிக்கைகளை தெளிவாகக் குறிப்பிட்டு விண்ணப்பத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்ட விண்ணப்பம் என தலைப்பிட்டு மாவட்ட கருவூல அலுவலருக்கு மே 25-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மாவட்ட கருவூல அலுவலரின் அதிகார வரம்புக்கு உட்பட்ட அனைத்து விண்ணப்பங்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுத்து குறைதீர் கூட்டத்தின்போது உரிய ஆணைகள் வழங்கப்படும். மேலும், கூட்டத்தின்போது ஓய்வூதிய புத்தகங்களில் பதிவுகள் மேற்கொள்ளுதல் போன்ற ஓய்வூதியம் தொடர்பான சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், இக்கூட்டத்தின்போது திருத்தப்பட்ட ஓய்வூதியத்துக்கான கணக்கீட்டுத் தாள்கள் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments