FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தமிழ்ப் பல்கலை.யில் ஆசிரியர் தின விழா

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதில்,  பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் செ. சுப்பிரமணியன் கேக் வெட்டி பேசியது:
குடியரசு முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் அடிப்படையில் கல்லூரி ஆசிரியராக இருந்து,  பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் செயலாற்றியவர். ஆசிரியர் பணியே அறப்பணி என்பதற்கு முன் மாதிரியாக அவர் விளங்கியதால், அவரது மாணவர்களே அவரது பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடத் தொடங்கினர். 
அதுவே பிற்காலத்தில் ஆசிரியர் தினமாக மாறி கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய கொள்கைகள், தத்துவங்கள் என்றும் இளைய சமுதாயத்துக்குப் பயன் அளிக்கும்.
போற்றுதலுக்குரிய அவருடைய உழைப்பையும், நல்ல குணங்களையும் மாணவர்கள் பின்பற்ற வேண்டும். 
இதன்மூலம் எதிர்கால இந்தியா வலிமையும் வளமும் பெறும் என்றார் சுப்பிரமணியன்.மேலும், சுப்பிரமணியன், பேராசிரியர் கமலதியாகராஜனுக்கு நூற்றுக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பொன்னாடை அனிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments