FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

வைணவக் கோயில்களில் கிருஷ்ண ஜயந்தி உறியடி விழா

கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி  கும்பகோணத்தில் உள்ள 8 வைணவ கோயில்களில் உறியடி திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி  கும்பகோணத்தில் உள்ள 8 வைணவ கோயில்களில் உறியடி திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கிருஷ்ண அவதாரத்தின்போது கிருஷ்ணர் வீட்டில் உறியில் சேகரித்து வைக்கபட்டிருந்த நவநீதம் என்றழைக்கப்படும் வெண்ணெயை உடைக்கும் நாளை உறியடி நாளாக ஒவ்வொரு வைணவ கோயில்களிலும் கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி,  கும்பகோணம் ராமசுவாமி,  சக்கரபாணி,  சாரங்கபாணி,  ஆதிவராகர், ராஜகோபாலர்,  நவநீத கிருஷ்ணன்,  மேலகாவிரி வரதராஜபெருமாள்,  வேதநாராயண பெருமாள் ஆகிய 8  கோயில்களில் உறியடி உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் ராமபிரான் உற்சவ மூர்த்தியாக தங்க படிச்சட்டத்தில் வந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது,  இடையர் குலத்தோர் உற்சாகமாக வந்து உறியை அடித்து மகிழ்ந்தனர். பின்னர்  சுவாமி திருவீதியுலா நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments