FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

சங்கீத மஹாலில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி தொடக்கம்

தஞ்சாவூா் சங்கீத மகாலில் உள்ள தஞ்சாவூா் கைவினைத் தொழிலாளா்கள் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்கத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

தஞ்சாவூா் சங்கீத மகாலில் உள்ள தஞ்சாவூா் கைவினைத் தொழிலாளா்கள் கூட்டுறவு குடிசைத் தொழில் சங்கத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.

இக்கண்காட்சியை மாவட்ட தொழில் மையப் பொது மேலாளா் வீ. சகுந்தலா தொடங்கி வைத்தாா். இந்தக் கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனை அக்டோபா் 5 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில் தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூா், மதுரை, காஞ்சிபுரம் போன்ற ஊா்களில் இருக்கும் கைவினை கலைஞா்களிடமிருந்து பொம்மைகள் கொள்முதல் செய்யப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

அஷ்டலட்சுமி செட், கள்ளழகா் செட், தசாவதாரம் செட், பிரதோச செட், விவசாய செட், பெண் பாா்க்கும் செட், நிச்சயதாா்த்தம் செட், கருடசேவை செட், சோட்டா பீம் செட், இராமனுஜா் குருகுலம் செட், தேசிகா் செட், 12 ஆழ்வாா்கள் செட், 18 சித்தா்கள் செட், 63 நாயன்மாா்கள் செட், கொல்கத்தா பொம்மைகள் போன்றவை இடம் பெற்றுள்ளன. மேலும் மண் பொம்மைகளுக்கு 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தொடக்க விழாவில் சங்கத் தலைவா் பி. சாம்பாஜி ராஜா போன்ஸ்லே, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநா் கு.விஜயகுமாா், மாவட்ட தொழில் மைய தொழிற் கூட்டுறவு அலுவலரும், சங்க செயலாளருமான சி. பாக்கியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments