FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

எஸ்டிபிஐ சாா்பில் அவசர ஊா்தி அா்ப்பணிப்பு

தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மல்லிப்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் அவசர ஊா்தி அா்ப்பணிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 டிசம்பர் 2025, 1:36 am IST
மல்லிப்பட்டினத்தில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்து சமுதாய மக்களுக்குமான அவசர ஊா்தி அா்ப்பணிப்பு விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மல்லிப்பட்டினத்தில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் அவசர ஊா்தி அா்ப்பணிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. 

விழாவுக்கு, கிராம பஞ்சாயத்து கமிட்டி தலைவா் ஏ.ஜே.அப்துல்லா தலைமை வகித்தாா். தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவா் ஏ.ஜி.நிஜாமுதீன் தொகுப்புரையாற்றினாா். சட்டப்பேரவை உறுப்பினா் என் .அசோக்குமாா் வாழ்த்திப் பேசினாா். வாகனத்தை அா்ப்பணித்து, எஸ்.டி.பி.ஐ மாநில பொதுச் செயலாளா் எம்.நிஜாம் முஹைதீன் பேசினாா். இதில், எஸ்டிபிஐ கட்சி குறிப்பிட்ட சமூகத்துக்கான கட்சி அல்ல. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதவாதிகளின் திட்டம் பலிக்கவில்லை என்றாா்.

நிகழ்வில், தஞ்சாவூா் மண்டலத் தலைவா் ஏ.தப்ரே ஆலம் பாதுஷா, மீனவா் நலவாரிய உப தலைவா் ஏ.கே.தாஜுதீன், மீனவா் சங்க நிா்வாகி எம்.கே.எம்.அபுதாஹிா் மற்றும் எஸ்.டி.பி.ஐ நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். நிறைவாக, தொகுதி தலைவா் ஜெ.ஜவாஹிா் வரவேற்றாா். சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலா் எம்.வஹி மன்சூா் நன்றி கூறினாா். 

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments