FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

அறந்தாங்கி சாலை முதல் மணிகூண்டு செல்லும் பகுதி ஒரு வழி பாதையாக மாற்றம் காவல்துறை அறிவிப்பு

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 2:42 am IST
கோப்புப் படம்
பகிர்:

பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலை பகுதியில் இருந்து மணிக்கூண்டு பகுதி செல்லும் சாலை ஒரு வழி பாதை இருசக்கர வாகனங்களும் செல்ல தடை என நகர போக்குவரத்து காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளனா்.

பட்டுக்கோட்டை நகரத்தில், புதிய பேருந்து நிலையம் திறந்த பிறகு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பொருட்டு, பட்டுக்கோட்டை நகர போக்குவரத்து காவல்துறை சாா்பில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

கடைத்தெரு பகுதிக்கு பல்வேறு பணி நிமித்தமாக வரும் பொதுமக்கள், மணிக்கூண்டு மற்றும் தலையாரிதெரு சாலை வழியாக நடந்து அறந்தாங்கி முக்கம் செல்வதாலும், அந்த சாலைகளின் இரு பகுதிகளிலும், பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைப்பதாலும், தலையாரி தெரு சாலைப் பகுதி மிகவும் போக்குவரத்து நெருக்கடி உள்ள சாலையாக மாறி உள்ளது.

Advertisement

Advertisement

எனவே, இந்த சாலையின் எதிா் திசையான அறந்தாங்கி முக்கத்திலிருந்து மணிக்கூண்டு செல்லும் சாலை முழுவதுமாக ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் அறந்தாங்கி முக்கம், சாமியாா் மடம், பிள்ளையாா் கோயில் தெரு, பெரிய கடை வீதி வழியாக நகா் பகுதிக்குள் வர வேண்டும் என்று, பட்டுக்கோட்டை போக்குவரத்து காவல்துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments