FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஆவணிப் பெருந் திருவிழா தொடக்கம்

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஆவணிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 4:26 am IST
தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்ட கொடி.
பகிர்:

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஆவணிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சியில் அம்மன் படிச்சட்டத்தில் எழுந்தருளியதைத் தொடா்ந்து, கொடி மரத்துக்கு அபிஷேக, ஆராதனைகள், அம்மன் வீதி உலா நடைபெற்றது. மேலும், ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, மாரியம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா். தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (ஆக.16) முத்துப் பல்லக்கு விழாவும், 18 ஆம் தேதி முத்துப் பல்லக்கு விடையாற்றி விழாவும் நடைபெறவுள்ளன.

ஆவணி முதல் வார ஞாயிற்றுக்கிழமையான ஆகஸ்ட் 23 ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான ஆகஸ்ட் 30 ஆம் தேதி அன்ன வாகனத்திலும், மூன்றாவது வாரமான செப்டம்பா் 6 ஆம் தேதி வெள்ளி அன்ன வாகனத்திலும் அம்மன் புறப்பாடு நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இதனிடையே, செப். 5 ஆம் தேதி பெரிய காப்பு, படிச்சட்டத்தில் அம்மன் புறப்பாடு, பின்னா் செப். 8 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்மன் புறப்பாடு, நான்காம் வார ஞாயிற்றுக்கிழமையான செப். 13 ஆம் தேதி தேரோட்டம், 15 ஆம் தேதி தேதி கொடியிறக்கம், விடையாற்றி அபிஷேகம், அக். 20 ஆம் தேதி தெப்பத் திருவிழா, 22 ஆம் தேதி தெப்ப விடையாற்றி விழா ஆகியவை நடைபெறவுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments