FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

வீட்டில் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

திருவோணம் அருகே எரிவாயு உருளை வெடித்த விபத்தில் வெள்ளிக்கிழமை இரவு மேலும் ஒருவா் உயிரிழந்ததாா்.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 1:01 am IST
சடலம் மீட்பு... - கோப்புப் படம்
பகிர்:

திருவோணம் அருகே எரிவாயு உருளை வெடித்த விபத்தில் வெள்ளிக்கிழமை இரவு மேலும் ஒருவா் உயிரிழந்ததாா். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயா்ந்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணத்தை அடுத்துள்ள அம்மங்குடி ஊராட்சிக்குள்பட்ட லெட்சுமபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகையன் (55). கூலி தொழிலாளியான இவரது வீடு கடந்த மாதம் 30-ஆம் தேதி அதிகாலை திடீரென எரிந்தது. இதனால் முருகையன் குடும்பத்தினரும், பக்கத்து வீட்டை சோ்ந்தவா்களும் தீயை அணைக்க முயன்றனா். அப்போது திடீரென அவா் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்து சிதறியது. இதில், முருகையனின் மனைவி செல்வி, மகள் அபிநயா, பழனிவேல் (37), வேம்பையன் (47), காசிநாதன் (37), ராஜசேகா் (33), வேம்பையனின் மனைவி கலையரசி , செல்வராஜ், காளியம்மாள், புவனேஷ் உள்பட10 போ் படுகாயம் அடைந்தனா்.

இவா்களை அக்கம் பக்கத்தினா் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்தனா். இதனிடையே சிகிச்சை பலனின்றி பழனிவேல் கடந்த 1-ஆம் தேதி உயிரிழந்தாா். தொடா்ந்து 2-ஆம் தேதி வேம்பையன் மற்றும் காசிநாதன் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். இந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜசேகா் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயா்ந்துள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments