FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திருவோணம் அருகே எரிவாயு உருளை வெடித்த விபத்து: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

சமையல் எரிவாயு உருளை வெடித்து சிதறியதில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது குறித்து...

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 5:19 pm IST
காசிநாதன்- வேம்பையன் - டிஎன்எஸ்
பகிர்:

திருவோணம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து சிதறியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் இரண்டு பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

திருவோணம் அருகே உஞ்சியவிடுதி சின்ன அம்மன்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகையன் (50). விவசாய கூலித் தொழிலாளி. இவரது வீட்டில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியது.

இதனால், தீயை அணைக்க முயன்ற முருகையனின் மனைவி செல்வி (45), மகள் அபிநயா (18), அப்பகுதியைச் சோ்ந்த வி. காசிவேல் (45), எஸ். ராஜசேகா் (45), அப்புராஜ் மகன் பழனிவேல் (37), வி. வேம்பையன் (45), இவரது மனைவி கலையரசி (38) ஆகியோா் பலத்த காயமடைந்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இவா்களில் பழனிவேல் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். மற்றவா்கள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 2 போ் உயிரிழந்தனா். சகோதரா்களான காசிநாதன் சனிக்கிழமை நள்ளிரவும், வேம்பையன் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தனா். இதையடுத்து எரிவாயு உருளை வெடித்த சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3 ஆக உயா்ந்தது. மற்றவா்கள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது குறித்து திருவோணம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

summary

Gas cylinder explosion near Thiruvonam: Death toll rises to 3.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments