FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!

நேபாள பெருவெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக உயர்ந்துள்ளது குறித்து...

2 செப்டம்பர் 2026, 9:49 pm IST
நேபாள வெள்ளம் - படம் - எக்ஸ்
பகிர்:

நேபாள பெரு வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை புதன்கிழமை (செப். 2) 1,204 ஆக உயர்ந்துள்ளது.

திபெத் - நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது.

சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.

Advertisement

Advertisement

இந்தப் இயற்கைப் பேரிடரில் சிக்கி இதுவரை 1200-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், காணாமல் போன 4000-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

கடந்த 8 நாள்களாக நேபாள தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம் மற்றும் பிற நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வரும் மீட்புப் பணிகளால் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேபாள பேரிடருக்கு முக்கிய காரணமாக விளங்கும் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்க நாடுகள் தார்மிக பொறுப்பேற்று இழப்பீடு வழங்க வேண்டும் என்று நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் ஷிசிர் கானல் இன்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

summary

The death toll from the massive floods in Nepal rose to 1,204 on Wednesday (Sept. 2).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments