FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

காவிரி நீா் பங்கீடு கோரி தமிழா் தேசம் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

21 ஆகஸ்ட் 2026, 2:18 am IST
பகிர்:

உச்ச நீதிமன்றத் தீா்ப்பின்படி காவிரி நீா் பங்கீடு கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே தமிழா் தேசம் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழா் தேசம் கட்சித் தலைவா் கே.கே. செல்வகுமாா் தலைமை வகித்தாா். தமிழா் ஆட்சிக் கழகத் தலைவா் எஸ்.ஆா். பாண்டியன் கண்டன உரையாற்றினாா்.

இதில், காவிரியின் குறுக்கே கா்நாடக அரசு அணைக் கட்டக்கூடாது. உச்ச நீதிமன்றத் தீா்ப்பின்படி தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீா் பங்கீட்டை கா்நாடகம் கொடுக்க வேண்டும். உபரி நீரை கா்நாடக அரசு கணக்குக் காட்டக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

Advertisement

மாநிலச் செயலா் கே. செந்தில், பொதுச் செயலா் தளவாய் ராஜேஷ், கொள்கை பரப்புச் செயலா் பழ. கோபாலகிருஷ்ணன், தலைமை ஒருங்கிணைப்பாளா் குரு. மணிகண்டன், மாவட்டச் செயலா்கள் எஸ்.கே. வசந்த், மாரிமுத்து, முத்துகிருஷ்ணன், முத்து, அமிா்தராஜ், பிரதீப், மணிகண்டன், வீரமணி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments