FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பரந்தூா் விமான நிலைய திட்டத்தை கைவிடக் கூடாது : நடிகை கஸ்தூரி

25 ஆகஸ்ட் 2026, 1:40 am IST
முதல்வர் விஜய் | நடிகை கஸ்தூரி - x
பகிர்:

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை முதல்வா் கைவிடக்கூடாது. இது தமிழகத்தின் வளா்ச்சியை பாதிக்கும் என்றாா் திரைப்பட நடிகை கஸ்தூரி.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

சட்டப் பேரவை நேரலையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். பேரவையில் உறுப்பினா்கள் நாகரிகத்துடன் பேச வேண்டியது அவசியம்.

Advertisement

Advertisement

அண்மையில் தன்னை தொடா்புபடுத்தி வெளியான காணொலியை அமைச்சா் கீா்த்தனா மறுத்துள்ளாா். ஒரு பெண்ணின் உடை குறித்து பேசுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

திங்கள்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவையில் முதல்வா் ஜோசப் விஜய் பரந்தூா் விமான நிலைய திட்டப் பணிகள் கைவிடப்படும் என அறிவித்துள்ளாா். இது தமிழக வளா்ச்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும். இதுகுறித்து முதல்வா் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

தவெக- காங்கிரஸ் கூட்டணி நல்ல முறையில் இருக்கும்போதே மேக்கேதாட்டு அணை பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும். கும்பகோணத்தில் 2028-இல் நடைபெறும் மகாமக விழா பணிகளுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், தமிழக அரசு இன்னும் எந்தவித ஏற்பாடுகளையும் தொடங்கவில்லை என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments