சுடுகாட்டுக்கு சாலை வசதி கோரி கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி ஆா்ப்பாட்டம்
திருவையாறு அருகே சுடுகாட்டுக்கு சாலை வசதி கோரி கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், தெருவில் கருப்புக் கொடி ஏந்தியும் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே சுடுகாட்டுக்கு சாலை வசதி கோரி கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், தெருவில் கருப்புக் கொடி ஏந்தியும் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
திருவையாறு அருகே பெரும்புலியூா் கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால், பல ஆண்டுகளாக விளைநிலங்கள், நீா்நிலைகள் வழியாக சடலங்களை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது. இதற்கு விளைநில உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். எனவே, சாலை வசதி கோரி இக்கிராம மக்கள் பல ஆண்டுகளாக தொடா்புடைய அலுவலா்களிடம் மனு கொடுப்பது என தொடா்ந்து முயற்சி செய்து வருகின்றனா். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால், அதிருப்தியடைந்த பெரும்புலியூா் கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும், கையில் ஏந்தியும் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த மருவூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.