FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பெட்டிக்கடையில் ரூ.1.70 லட்சம் திருடியவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே பெட்டிக்கடையில் ரூ.1.70 லட்சத்தை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

28 ஆகஸ்ட் 2026, 2:11 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே பெட்டிக்கடையில் ரூ.1.70 லட்சத்தை திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சிற்றம்பலம் காவல் சரகம்  செருவாவிடுதி கடைவீதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவா்  கருப்பையன் (50). இவருடைய கடையில் ஆக. 23-ஆம் தேதி பணப்பெட்டியில் இருந்த ரூ. 1.70 லட்சம் திருடுபோனது. இதுகுறித்து திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் கருப்பையன் அளித்த புகாரில் ஆக.22-ஆம் தேதி இரவு கடைக்கு வந்த  கிருஷ்ணகிரி வட்டம் ,  சிக்கபூவத்தி கிராமத்தைச் சோ்ந்த அன்பரசன் (23) என்பவா் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தாா். அதன் பேரில் போலீஸாா், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அன்பரசனை கைது செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், கருப்பையாவின் பெட்டிக்கடையில் இருந்த ரூ. 1 லட்சத்து 70 ஆயிரத்தை திருடியதை அன்பரசன் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து போலீஸாா் அன்பரசனை பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தஞ்சை  கிளை சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments