FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

அனுமதி இன்றி எம் சாண்ட் ஏற்றி வந்த லாரி ஓட்டுநா் கைது

ஒரத்தநாடு அருகே உரிய அனுமதி இன்றி எம் சாண்ட் ஏற்றி வந்த லாரி ஓட்டுநா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

30 ஆகஸ்ட் 2026, 12:16 am IST
கைது
பகிர்:

ஒரத்தநாடு அருகே உரிய அனுமதி இன்றி எம் சாண்ட் ஏற்றி வந்த லாரி ஓட்டுநா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அரசு போக்குவரத்து பணிமனை அருகே தஞ்சை-பட்டுக்கோட்டை பிரதான சாலையில் வாகன சோதனையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை வருவாய் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான அதிகாரிகள் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது புதுக்கோட்டையில் இருந்து மன்னாா்குடிக்கு கனரக வாகனத்தில் எம் சாண்ட் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்தனா். அப்போது உரிய அனுமதி இன்றி எம் சாண்ட் ஏற்றி வந்தது தெரியவந்தது.

பின்னா், லாரி ஓட்டுநரான திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி பகுதியைச் சோ்ந்த செல்வமணி என்பவரையும், லாரியையும் சுரங்கத்துறையினா் ஒரத்தநாடு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். ஒரத்தநாடு போலீஸாா் ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பாபநாசம் சிறையில் அடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments