FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

குப்பைகளை தரம் பிரித்து வழங்காத 298 கடைகளுக்கு அபராதம் விதிப்பு

கும்பகோணம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்காத 298 கடைகளுக்கு ரூ. 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

30 ஆகஸ்ட் 2026, 12:28 am IST
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்காத 298 கடைகளுக்கு ரூ. 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, குப்பையை உருவாக்கும் இடத்திலேயே ஈரக்கழிவு, உலா்கழிவு, சுகாதார கழிவு, சிறப்பு வகை கழிவு என 4 வகைகளாக தரம் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் கே.எம். சுதா உத்தரவிட்டாா்.

இதன்படி, கும்பகோணம் பேருந்து நிலையம், ராமசாமி கோயில் சந்நிதி, பூக்கடை தெரு, பாலக்கரை, கும்பேசுவரா் தெற்கு வீதி, வடக்கு வீதி, மகாமகக் குளம் ஆகிய பகுதிகளில் வணிக நிறுவனங்களில் 4 வகையான குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டு, குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிா என சுகாதாரத் துறையினா் சனிக்கிழமை ஆய்வு நடத்தினா். அதில், குப்பைத் தொட்டிகள் வைக்காத மற்றும் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்காத 298 கடைகளுக்கு மொத்தம் ரூ. 55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

பொதுமக்களும், வணிக நிறுவனங்களும் தங்களது வீடு, கடைகளில் சேரும் கழிவுகளை 4 வகைகளாக தரம் பிரித்து வழங்கி, பொது சுகாதாரப் பணிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments