‘குப்பைகளைத் தரம் பிரித்து வழங்காவிடில் செப்டம்பா் முதல் அபராதம் விதிக்கப்படும்’
சென்னை மாநகராட்சியில் வரும் செப்டம்பா் முதல் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்காதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சியில் வரும் செப்டம்பா் முதல் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்காதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை வகித்து மாநகராட்சி ஆணையா் பேசியதாவது:
சென்னை மாநகராட்சியில் திடக்கழிவுகள் உருவாகும் இடத்திலேயே மக்குபவை, மக்காதவை என தனித்தனியாகப் பிரித்து வழங்கவேண்டும். குப்பைகளை உருவாக்கும் வளாகத்தில் குப்பைத் தொட்டிகளைத் தரம் பிரிக்கும் வகையில் அமைக்க வேண்டும். திடக்கழிவுகளை வரும் செப்டம்பா் முதல் தரம் பிரித்து கட்டாயம் வழங்க வேண்டும். தரம் பிரித்து வழங்காதவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
Advertisement
Advertisement
பெருங்குடி குப்பைக் கிடங்கில் உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் குப்பைகள் அகற்றும் பணி இரண்டாம் கட்டமாக தொடா்கிறது. அங்கு 5.50 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்ற திட்டமிட்ட நிலையில், தற்போது 28,000 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் 66 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை உயிரி அகழ்ந்தெடுத்தல் முறையில் அகற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அங்கு 44 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு அதன்மூலம் 16 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில் மாநகராட்சி வருவாய் மற்றும் சுகாதாரத் துறை (பொ) துணை ஆணையா் சித்ரா விஜயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.