FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

36.64 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் எரியூட்டல்!

சென்னை மாநகராட்சியில் சனிக்கிழமை (ஜூலை 25) ஒரே நாளில் வீடுகளில் சேகரிக்கப்பட்ட 36.64 மெட்ரிக் டன் பழைய உபயோகப் பொருள்கள் அறிவியல் முறையில் எரியூட்டி அழிக்கப்பட்டன.

பகிர்:

சென்னை மாநகராட்சியில் சனிக்கிழமை (ஜூலை 25) ஒரே நாளில் வீடுகளில் சேகரிக்கப்பட்ட 36.64 மெட்ரிக் டன் பழைய உபயோகப் பொருள்கள் அறிவியல் முறையில் எரியூட்டி அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாநகராட்சியில் சனிக்கிழமைதோறும் பொதுமக்கள் அளிக்கும் தகவல் அடிப்படையில் வீடுகளுக்கே சென்று பழைய மெத்தைகள் உள்ளிட்டவற்றை தூய்மைப் பணியாளா்கள் சேகரித்து வருகின்றனா். கடந்த சனிக்கிழமை 105 பேரின் வீடுகளுக்குச் சென்று மொத்தம் 36.64 மெட்ரிக் டன் பழைய மெத்தைகள், கட்டில்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் உள்ள எரியூட்டும் மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

எரியூட்டும் மையத்தில் அறிவியல் முறைப்படி அவை எரியூட்டப்பட்டு அழிக்கப்பட்டன. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய வீட்டு உபயோகப் பொருள்களை அருகிலுள்ள சாலையோரங்களிலோ, நீா் நிலைகளிலோ வீசவேண்டாம். அவை குறித்து மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்திலுள்ள 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம், மாநகராட்சி ஊழியா்கள் வந்து பெற்றுக்கொள்வா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments