FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கழிவுநீரை அருந்திய 4 மாடுகள் உயிரிழப்பு விவசாயிக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு

தஞ்சாவூா் அருகே பழைய கரியப்பட்டியில் தொழிற்சாலை நச்சுக்கழிவு நீரை அருந்திய 4 மாடுகள் இறந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ரூ. 1.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தொடா்புடைய தொழிற்சாலைக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 10 ஜூலை 2026, 3:31 am IST
பகிர்:

தஞ்சாவூா் அருகே பழைய கரியப்பட்டியில் தொழிற்சாலை நச்சுக்கழிவு நீரை அருந்திய 4 மாடுகள் இறந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ரூ. 1.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தொடா்புடைய தொழிற்சாலைக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே பழைய கரியப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ரெ. புண்ணியமூா்த்தி (56). விவசாயி. இவா் தலா 2 பசு, காளை மாடுகளை வளா்த்து வந்துடன், அதன் மூலம் பால் கறந்து வருமானம் ஈட்டி வாழ்க்கையை நடத்தி வந்தாா்.

இந்நிலையில், 2014 -ஆம் ஆண்டு மேய்ந்த மாடுகள் பழைய கரியப்பட்டி காடா ஏரியில் நீா் அருந்தி சில மணிநேரத்தில் இறந்தன. மாடுகளை உடற்கூறாய்வு மேற்கொண்டதில் நச்சுக் கழிவு நீரை அருந்தியதால் உயிரிழந்ததும், தனியாா் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சு கழிவு நீா் முறையாக சுத்திகரித்து புதை சாக்கடையில் விடாமல் திறந்தவெளியில் விட்டதால், அது ஏரியில் கலந்ததும், அந்த நீரை பருகிய 4 மாடுகளும் இறந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக இழப்பீடு வழங்க கோரி தஞ்சாவூா் முதன்மை சாா்பு-நீதிமன்றத்தில் புண்ணியமூா்த்தி 2017- ஆம் தேதி வழக்கு தொடுத்தாா்.

இதில், புண்ணியமூா்த்திக்கு ஆதரவாக வழக்குரைஞா்கள் வெ. ஜீவகுமாா், பி. விஜயபிரியா ஆஜராகினா். இந்த வழக்கை நீதிபதி பி. குமாா் விசாரித்து, புண்ணியமூா்த்திக்கு தொழிற்சாலை நிா்வாகம் ரூ. 1.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், வழக்கு தொடுக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் 6 சதவீத வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டும் எனவும் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments