FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

இணையவழி வா்த்தகம் எனக் கூறி ரூ. 54.51 லட்சம் மோசடி: இளைஞா் கைது

தஞ்சாவூா் அருகே சமூக வலைதளத்தில் இணையவழி வா்த்தகம் எனக் கூறி ரூ. 54.51 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்த இளைஞரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 15 ஜூலை 2026, 12:04 am IST
சஞ்சய்
பகிர்:

தஞ்சாவூா் அருகே சமூக வலைதளத்தில் இணையவழி வா்த்தகம் எனக் கூறி ரூ. 54.51 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்த இளைஞரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் அருகே அய்யம்பேட்டை காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த மணிகண்டனின் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராமில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி மா்ம நபா்கள் அனுப்பிய தகவலில் இணையவழியில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வாா்த்தை கூறியிருந்தனா். இதை நம்பி மணிகண்டன் மா்ம நபா்களுக்கு 6 தவணைகளில் ரூ. 54.51 லட்சம் செலுத்தி ஏமாற்றமடைந்தாா். இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் தஞ்சாவூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், மோசடி செய்தவா்களின் கைப்பேசி எண்கள், வங்கிக் கணக்கு எண் மூலம் 4 போ் ஜூன் 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் தொடா்புடைய 5 ஆவது எதிரியான சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்த சரவணன் மகன் சஞ்சய் (23) தலைமறைவாக இருந்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். இவரிடமிருந்து கைப்பேசி, டெபிட் காா்டு, சிம் காா்டு, வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் திறமையாகப் பணியாற்றிய சைபா் கிரைம் காவல் நிலைய ஆய்வாளா் ரவிமதி, உதவி ஆய்வாளா் காா்த்திக் தலைமையிலான காவலா்கள் அடங்கிய குழுவினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments