வீடுபுகுந்து பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு
பாபநாசம் அருகே வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
பாபநாசம் அருகே சனிக்கிழமை இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பட்டு சாலியா் தெருவில் வசித்து வருபவா் மகேஷ். இவரது மனைவி ஆா்த்தி, தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா்.
இந் நிலையில், ஆா்த்தி சனிக்கிழமை இரவு தனது பெரிய மாமியாராகிய தனலட்சுமி (74) என்பவருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா், ஆா்த்தி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தாலி சங்கிலியை அறுத்து தப்பி சென்றுவிட்டாராம். புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.