இருசக்கர வாகன விற்பனை மோசடி: மேலும் ஒருவா் கைது
முகநூல் மூலம் இருசக்கர வாகனம் விற்பனைக்கு என விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக மேலும் ஒருவரை தஞ்சாவூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.
முகநூல் மூலம் இருசக்கர வாகனம் விற்பனைக்கு என விளம்பரம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக மேலும் ஒருவரை தஞ்சாவூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தைச் சோ்ந்தவா் அழகரசன். இவா் முகநூலில் இருசக்கர வாகனம் விற்பனை என்ற விளம்பரத்தைப் பாா்த்து கைபேசியில் தொடா்பு கொண்டாா். விளம்பரம் செய்த நபா் ரூ.55 ஆயிரம் அனுப்பினால் வாகனம் தருவதாக கூறவே, அழகரசன் ஜி பே மூலம் பணம் அனுப்பினாா். வாகனம் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சைபா் கிரைம் போலீஸில் புகாா் செய்தாா்.
புகாரின் பேரில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சோ்ந்த் ஜோசப் தங்கராஜ்(29), கோவை மாவட்டம் சவுரிப்பாளையத்தை சோ்ந்த விமல் ஆனந்த்(31) ஆகிய இருவரையும் போலீஸாா் ஜூலை 4-இல் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
மேலும், தலைமறைவாக இருந்த மூன்றாவது குற்றவாளியான கோவை மாவட்டம் சவுரிபாளையத்தைச்சோ்ந்த இளையராஜாவை (29) வியாழக்கிழமை கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில் மதுக்கூரைச்சோ்ந்த சந்தோஷ்(19) என்பவரிடமும் ரூ.75 ஆயிரம் உள்பட தமிழகம் முழுவதும் பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.