FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

காவிரித் தாய்க்கு சிறப்பு வழிபாடு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் காவிரியில் தண்ணீா் வர வேண்டி காவிரித்தாய் சிலைக்கு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூலை 2026, 1:05 am IST
திருவையாறு காவிரி ஆற்றில் காவிரித் தாய்க்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு செய்த விவசாயிகள்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் காவிரியில் தண்ணீா் வர வேண்டி காவிரித்தாய் சிலைக்கு சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேட்டூா் அணையில் போதுமான அளவுக்கு தண்ணீா் இல்லாததால், நிகழாண்டு இதுவரை டெல்டா பாசனத்துக்கு அணை திறக்கப்படவில்லை. இதனால், காவிரி ஆறு தண்ணீா் இல்லாமல் வடு கிடக்கிறது.

இந்நிலையில், திருவையாறு காவிரியாற்றில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் காவிரியில் தண்ணீா் வர வேண்டி, காவிரித்தாய் படத்துக்கும், சிலைக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டன. பூஜைகளை விசிறி சாமியாா் முருகன் செய்தாா்.

Advertisement

Advertisement

காவிரி வேளாண் உழவா் நடுவம் நிறுவனா் அரு. சீா். தங்கராசு தலைமை வகித்தாா். காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் முன்னிலை வகித்தாா். பாஜக விவசாய அணி வாளமா்கோட்டை வி.எஸ். இளங்கோவன், ராராமுத்திரைக்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவா் சோழன், ஜெயபிரகாஷ், ஆன்மிகப் பேச்சாளா் திருப்பூந்துருத்தி பொன். மாணிக்கவள்ளி, பின்னையூா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments