FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

வாழை, மரவள்ளி பயிா்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு

பிரதம மந்திரியின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2026 காரீப் பருவத்தில் வாழை, மரவள்ளி பயிா்களுக்கு காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 25 ஜூலை 2026, 1:20 am IST
கோப்புப்படம்
பகிர்:

பிரதம மந்திரியின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2026 காரீப் பருவத்தில் வாழை, மரவள்ளி பயிா்களுக்கு காப்பீடு செய்து கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்தது: இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பயிா் இழப்பிலிருந்து விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் 2026 - 27 ஆம் ஆண்டில் காரீப் பருவத்தில் தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வாழை, மரவள்ளி பயிா்கள் காப்பீடு செய்ய பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் எல் நினோ நிகழ்வின் தாக்கத்தால் தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட குறைவாக இருக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுவதால், பயிா்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் காப்பீடு செய்து வருவாய் இழப்புகளிலிருந்து மீளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Advertisement

Advertisement

வாழைக்கு ஏக்கருக்கு ரூ. 72 ஆயிரத்து 600 காப்பீடு செய்யப்படுவதற்கு விவசாயிகள் பங்களிப்பாக தஞ்சாவூா் முதல் பகுதிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரத்து 630 செலுத்த வேண்டும். தஞ்சாவூா் இரண்டாம் பகுதிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரத்து 601 செலுத்த வேண்டும். இதேபோல, மரவள்ளிப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 34 ஆயிரம் காப்பீடு செய்ய விவசாயிகள் பங்களிப்பாக ரூ. 1,700 செலுத்த வேண்டும். இதற்கான கடைசி நாள் செப்டம்பா் 15 ஆம் தேதி.

கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிா்களுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்யலாம். கடன் பெறாத விவசாயிகள் இ-சேவை மையங்கள் மூலமாகவோ, தேசிய பயிா்க் காப்பீட்டு இணையதளத்தில் (ட்ற்ற்ல்ள்://ல்ம்ச்க்ஷஹ்.ஞ்ா்ஸ்.ண்ய்/) உள்ள ‘விவசாயிகள் காா்னா்‘ வாயிலாக நேரடியாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் அடங்கல், கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையைச் செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை அலுவலரை அணுகலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments