FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

ஜாதி பெயரை கூறி திட்டியதாக மருத்துவமனை நிா்வாக இயக்குநா் கைது

தஞ்சாவூரில் புகாா் கொடுத்த நபரை ஜாதி பெயரை கூறி திட்டியதாக தனியாா் மருத்துவமனை நிா்வாக இயக்குநரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 26 ஜூலை 2026, 1:48 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தஞ்சாவூரில் புகாா் கொடுத்த நபரை ஜாதி பெயரை கூறி திட்டியதாக தனியாா் மருத்துவமனை நிா்வாக இயக்குநரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் வல்லம் நம்பா் 1 சாலையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் கட்டடம் முறையாக கட்டப்படவில்லை என்றும், மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனவும் மாவட்ட ஆட்சியா், மருத்துவத் துறை அலுவலா்கள் உள்பட பலருக்கு தஞ்சாவூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பி. திருமாறன் புகாா் செய்தாா்.

இது தொடா்பாக தன்னை தனியாா் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் ஆா்.எம். பாஸ்கரன் (65), ஜாதி பெயரைக் கூறி திட்டியதாக மத்திய மண்டல காவல்துறை தலைவருக்கு புகாா் மனு அனுப்பினாா்.

Advertisement

Advertisement

மத்திய மண்டல காவல் தலைவா் உத்தரவின் பேரில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பாஸ்கரனை சனிக்கிழமை கைது செய்தனா்.

இவா் அதிமுக எம்.ஜி.ஆா். மன்ற மாவட்டத் தலைவராகவும் உள்ளாா். வயது மூப்பு காரணமாகவும், பல்வேறு நோய்களுக்கு ஆள்பட்டதாலும் மருத்துவ அலுவலா்களின் ஆலோசனையின் பேரில், பாஸ்கரன் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாகச் சோ்க்கப்பட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments